வரும் ஆண்டுகளில், உலகில் 27 சதவீதம் வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் நிலை உருவாகும் என்பதனால் இந்திய உலக வாகன மையமாக திகழும் என மத்திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் கூறியுள்ளார்.
உலக வாகன மையம்
அடுத்த சில வருடங்களில், உலகின் ஆட்டோ மையமாக இந்தியா உருவெடுக்கும் சூழல் உருவாக வுள்ளதால் உயர்தரத்தில் உருக்கு பொருட்களை தயாரிக்க வேண்டிய நிலைக்கு தயாராக உருக்கு நிறுவனங்கள் விளங்க வேண்டும் என மத்திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஆண்டுகளில், உலகில் உற்பத்தியாகும் வாகனங்களில், 27 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதற்கேற்ப, இந்தியா, உயர்தரத்தில் உருக்கு பொருட்களை தயாரிக்க வேண்டும். தற்போது, இந்தியாவின் உருக்கு, சர்வதேச தரத்திற்கு குறைவாகவே உள்ளது.
ஆகவே, பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், சர்வதேச தரத்திற்கு நிகராக, உருக்கு தயாரிக்க வேண்டும். இவ்வகை உருக்கை ஏற்றுமதி செய்வதன் மூலம், அன்னிய செலாவணியை மிச்சப்படுத்தலாம். பொதுத் துறையைச் சேர்ந்த, செயில் நிறுவனத்தின் கீழ், சேலம், பிலாய், ரூர்கேலா உள்ளிட்ட உருக்காலைகளை விரிவாக்கம் செய்து, நவீனமயமாக்க, கடந்த, 8 – 10 ஆண்டுகளில், 62 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், கச்சா உருக்கு உற்பத்தி, 1.28 கோடி டன்னில் இருந்து, 2.14 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக கூறினார்.