கடந்த ஏப்ரல் 2017 மாதந்திர விற்பனையில் டாப் 10 பைக்குளை இடத்தை பிடித்த மாடல்களை பற்றி இங்கே அறியலாம். இரு சக்கர வாகன பிரிவில் ஆக்டிவா ஸ்கூட்டர் ஆதிக்கம் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது.
டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2017
இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில் ஆக்டிவா ஸ்கூட்டர் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற இருசக்கர வாகனமாக விளங்கும் ஆக்டிவா கடந்த ஏப்ரல் மாத முடிவில் 3,12.632 அலகுகளை விற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.இது கடந்த ஏப்ரல் 2016 (2,33,935) மாதத்துடன் ஒப்பீடுகையில் 33.64 சதவிகித வளர்ச்சியாகும்.
இந்தியாவின் பைக் சந்தையில் முதலிட்டத்தில் உள்ள ஹீரோ ஸ்பிளென்டர் மாடல் ஏப்ரல் 2017ல் 2,26,681 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. முதல் 10 இடங்களில் ஹீரோ நிறுவனத்தின் 4 பைக் மாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்போர்ட்ஸ் பிராண்டாக கருதப்படும் பஜாஜ் பல்சர் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. முழுமையான பட்டியலை கீழே உள்ள அட்டவனையில் காணலாம்.