உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்ற வானா க்ரை சைபர் தாக்குதலால் ரெனோ நிறுவனம் சர்வதேச அளவில் சில நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை ரெனோ-நிசான் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல்
150க்கு மேற்பட்ட நாடுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட இணைய பயணாளர்களை சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான ரெனோ நிறுவனமும் ஐரோப்பா நாடுகளில் உள்ள ஆலைகளில் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதால் தற்காலிகமான தனது உற்பத்தியை பல்வேறு நாடுகளில் நிறுத்தி உள்ளது.
சென்னை ஒரகடம் அருகில் இயங்கி வருகின்ற ரெனோ-நிசான் கூட்டு ஆலையிலும் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் காவல்துறை மீது மால்வேர் தாக்குதல் நடைபெற்று நிலையில் இந்தியாவில் 100 க்கு மேற்பட்ட கணினிகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள நிலையில் ரெனோ-நிசான் இந்தியாவும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என தெரிகின்றது.