மிக பெரிய எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ மிக பெரும் தோல்வியை சந்திக்க போவதாகவே தெரிகின்றது. எனவே இதற்க்காக கட்ட அமைக்கப்பட்ட ப்ரித்யோக குஜராத் சனந்த் ஆலையின் முதலீட்டை ஈடுகட்ட டாடா மோட்டார்ஸ் புதிய ஹேட்ச்பேக் முயற்சியை கையில் எடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நானோ விற்பனை வெறும் 948 மட்டுமே ஆகும். சனந்த் ஆலையின் மொத்த உற்பத்தி திறன் 2.50 இலட்சம் நானோ கார்களாகும். உற்பத்தி தொடங்கியது முதல் இன்று வரை முழு உற்பத்தி அளவை ஒருமுறைக்கூட எட்டவில்லை மாற்றாக உற்பத்தி குறைப்பே செய்து வருகின்றது.
தற்பொழுது இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் நானோ கார்களின் எண்ணிக்கை 20% குறைவே ஆகும். மேலும் ஸ்டாக்களும் அதிகம் சேர்ந்துவிட்டதாம்.
இண்டிகா காரின் தளத்தில் புதிய ஹேட்ச்பேக் காரின் வடிவமைப்பிற்க்கான செயல்பாட்டினை டாடா முன்னேடுத்துள்ளது. இந்த புதிய ஹேட்ச்பேக் கோட் பெயர் X0 ஆகும். மேலும் இந்த கார் நானோவிற்க்கும் இண்டிகா காருக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
இந்த புதிய ஹேட்ச்பேக் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்.