இந்தியாவில் இசுசூ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பிரிமியம் ரக எஸ்யூவி மாடலான இசுசூ MU-X எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.23.99 லட்சத்தில் தொடங்குகின்றது. MU-X எஸ்யூவி ஆட்டோமேட்டிக் வேரியன்டில் மட்டுமே விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இசுசூ MU-X எஸ்யூவி
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டி மேக்ஸ் மற்றும் செவர்லே நிறுவனத்தின் ட்ரெயில் பிளேசர் எஸ்யூவி பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரிமியம் எஸ்யூவி மிக நேர்த்தியான தாத்பரியங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.
டிசைன்
கம்பீரமான தோற்றத்தை வழங்கும் வகையிலான கூர்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் புராஜெக்டர் முன் விளக்குகளுடன் கூடிய பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் முகப்பு தோற்றத்தில் இரட்டை ஸ்லாட் கொண்டு க்ரோம் பட்டை பதிக்கப்பட்ட பனி விளக்கு அறை கிரில் அமைப்பு போன்றவை மிக கட்டுமஸ்தான தோற்றத்தை பெற வழிவகுக்கின்றது.
பக்கவாட்டில் ட்ரெயில் பிளேஸர் மாடலுக்கு இணையான வடிவமைப்பை பெற்றிருப்பதுடன், 17 அங்குல டைமன்ட்கட் அலாய் வீல் போன்றவற்றுடன் . நேர்த்தியான எல்இடி டெயில் விளக்கு கொண்டு விளங்குகின்றது.
இன்டிரியர்
MU-X இன்டிரியரில் 7 இருக்கை வசதியுடன் கூடிய கேபினுடன் இரட்டை நிறங்களை பெற்ற டேஸ்போர்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவற்றுடன் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், இபிடி, ஏர்பேக் போன்றவை பெற்றதாக விளங்கும்.
எம்யூ-எக்ஸ் எஞ்சின்
ஆல்வீல் டிலைவ் வசதியுடன் கூடிய 177 ஹெச்பி பவருடன், 360 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் வகையிலான 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி போன்றவற்றுடன் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் உள்பட ரியர் வியூகேமரா போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளது.
போட்டியாளர்கள்
ஃபார்ச்சூனர், என்டேவர், ட்ரெயில்பிளேசர், பஜெரோ, சான்டாஃபீ ரெக்ஸ்டான் வரவுள்ள டிகுவான் போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியிட உள்ள இசுசூ MU-X 4×2 விலை ரூ. 23.99 லட்சம் மற்றும் 4×4 வேரியன்ட் விலை ரூ. 25.99 லட்சம் ஆகும்.
இசுசூ MU-X எஸ்யூவி குறிப்புகள்
- இசுசூ எம்யூ-எக்ஸ் எஸ்யூவி 4×2 மற்றும் 4×4 என இரண்டு வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 177 ஹெச்பி பவரை வழங்குகின்றது.
- ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்டில் மட்டுமே கிடைக்கின்றது.