150சிசி சந்தையில் மிக சிறப்பான மாடலாக விளங்குகின்ற 2017 ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் ரூ.83,490 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹார்னெட் 160R பைக்கில் பவர் குறைக்கப்பட்டு இரண்டு புதிய நிறங்களுடன், எடை 2 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது.
2017 ஹோண்டா சிபி ஹார்னெட் 160R
இந்தியாவின் முதல் பிஎஸ் 4 மாடாக அறிமுகம் செய்யப்பட்ட சிபி ஹார்னெட் 160R பைக்கில் சிவப்பு மற்றும் நீலம் என இரு நிறங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களுடன் சேர்த்து 4 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது.
புதிய நிறங்களை தவிர ஹார்னெட் 160ஆர் பைக் எடை சாதரன மாடல் 140 கிலோ எடையிலிருந்து 138 கிலோ எடையாக குறைக்கப்பட்டு, சிபிஎஸ் வேரியன்ட் மாடல் 142 கிலோ எடையிலிருந்து 140 கிலோ எடையாக குறைக்கப்பட்டுள்ளது.
சிபி யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டிருந்த அதே என்ஜினை சிபி ஹார்னெட் 160ஆர் பைக் பெற்றிருந்தாலும் முந்தைய மாடல் ஆற்றல் 15.7 பிஹெச்பி இருந்த நிலையில் தற்பொழுது 0.62 bhp குறைக்கப்படு 15.04 பிஹெச்பி பவருடன், டார்க் 14.76 என்எம் வழங்குகின்றது.. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.
CB Hornet 160R Specifications
என்ஜின் | 162.71 சிசி |
ஆற்றல் | 15.04 பிஹெச்பி @ 8500 rpm |
டார்க் | 14.76 என்எம் @ 6500 rpm |
கியர்பாக்ஸ் | 5 வேகம் – 1-N-2-3-4-5 |
மைலேஜ் | 58.95 Kmpl (ARAI) |
டாப் ஸ்பீடு | 110கிமீ |
நீxஅxஉ | 2041X783X1067 மிமீ |
டேங்க் | 12 லிட்டர் |
வீல்பேஸ் | 1345மிமீ |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 164மிமீ |
முன் டயர் | 100/80-17 |
பின் டயர் | 140/70-17 |
முன் பிரேக் | டிஸ்க் 276மிமீ |
பின் பிரேக் | டிரம் 130 மிமீ / டிஸ்க் 220மிமீ |
முன் சஸ்பென்ஷன் | டெலிஸ்கோபிக் |
பின் சஸ்பென்ஷன் | மோனோசாக் |
போட்டியாளர்கள்
ஜிக்ஸெர் , பல்சர் 150 , ஹங்க் , யமஹா FZ போன்ற மாடல்களுடன் போட்டியை ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் எதிர்கொள்ளுகின்றது.
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விலை
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிரம் – ரூ.83,490
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிஸ்க் சிபிஎஸ் – ரூ.87,990
{அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை விபரம் }