மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் 2013 காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை விம்பிள்டன் வீரர் போரீஸ் பெக்கர் அறிமுகம் செய்தார்.
2013 ஜிஎல் கிளாஸ் 100 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதன் முந்தைய பதிப்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎல் கிளாஸ்யில் புதிய ஜிஎல் 350சிடிஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய எஞ்சினை விட 22 % டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் co2 குறைக்கப்பட்டுள்ளது. இது 258பிஎஸ் ஆற்றல் மற்றும் டார்க் 650 என்எம் வரை வெளிப்படுத்தும்.
இதன் ஸ்டார்ட்டிங் முறையானது ஈக்கோ முறையில் உள்ளது. டிராஃபிக் சிக்கனல்களில் காத்திருக்கும் பொழுது தானாகவே எஞ்சின் ஆஃப் ஆகிவிடும். இயக்கும்பொழுது தானாகவே இயங்கும்.
புதிய மெர்சிடிஸ் ஜிஎல் கிளாஸ் காரில் பலதரப்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மேலும் புதிய கம்பீரத்தை தரக்கூடிய சக்திவாய்ந்த காராகும்.
புதிய மெர்சிடிஸ் ஜிஎல் கிளாஸ் விலை ரூ.77.5 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)