இந்தியன் மோட்டார்சைக்கிள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை நிர்வகித்து வருவது போலரிஸ் ஆகும்.
போலரிஸ் நிறுவனம் தன்னுடைய பிராண்ட்களை இந்தியாவில் களமிறக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. இந்தியன் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சென் நிறுவனத்திற்க்கு கடும் போட்டியை தரும்.
வருகிற ஆகஸ்ட் மாதம் ஸ்டூருகிஸ் மோட்டார் விழாவில் 2013 இந்தியன் சிஃப் (indian cheif) என்ற பைக் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த பைக் இந்தியாவிற்க்கு 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்.
2013 இந்தியன் சிஃப் பைக்கில் 1819சிசி தன்டர்ஸ்டோர்க் வி-டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 116பிஎஸ் இருக்கலாம்.
போலரிஸ் நிறுவனத்தின் விக்டரி பிராண்டின் கீழ் விற்பனைக்கு வரும். இதற்க்காக புதிய டீலர்களை நியமிக்க உள்ளது. முழுமையான கட்டமைப்பில் விற்பனைக்கு வருவதனால் விலை கூடுதலாகத்தான் இருக்கும்.