மஹிந்திரா வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் வருகிற ஜூன் 5 விற்பனைக்கு வருவதனை மஹிந்திரா உறுதி செய்துள்ளது. வெரிட்டோ வைப் டீசல் எஞ்சினில் மட்டும் விற்பனைக்கு வரவுள்ளது.
வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் வெரிட்டோ செடான் காரை அடிப்படையாக கொண்டதாகும். வைப் காரின் முகப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் செடான் பின்புறத்தில் உள்ள சி பில்லரை மட்டும் நீக்கியுள்ளது. வெரிட்டோவின் பாடி பேனல்கள் என அனைத்தும் பயன்படுத்தியுள்ளனர்.
வெரிட்டோ வைப் காரில் ரெனோ கே9கே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 68பிஎச்பி ஆகும். முதற்கட்டமாக டீசல் எஞ்சினில் மட்டுமே வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் கிடைக்கும்