2015 போர்ஷே 918 ஸ்பைடர் காரின் அதிகாரப்பூர்வ உற்பத்தி நிலை படங்களை போர்ஷே வெளியிட்டுள்ளது. இரண்டு விதமான ஆற்றலை கொண்டு இயங்கும் ஹைபிரிட் முறையில் போர்ஷே 918 ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் காராக உருவாக்கப்படுகிறது.
2015 போர்ஷே 918 ஸ்பைடர் காரில் 4.6 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் மற்றும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த ஆற்றல் 887எச்பி மற்றும் டார்க் 528 என்எம் ஆகும். 7 வேக தானியிங்கி பிடிகே முடுக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
போர்ஷே 918 ஸ்பைடர் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 340கிமீ ஆகும். எலக்ட்ரிக் ஆற்றலை மட்டும் வைத்து இயக்கும்பொழுது வாகனத்தின் உச்சகட்ட வேகம் மணிக்கு 150கிமீ ஆகும்.
போர்ஷே 918 ஸ்பைடர் கார் 0-100கிமீ வேகத்தை 2.8 விநாடிகளில் எட்டிவிடும்.
எலக்ட்ரிக் ஆற்றலை மட்டும் வைத்து சுமார் 29கிமீ வரை இயக்க முடியும். எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும்பொழுது ரீயர் விங், ஸ்பாய்லர் போன்றவை இயங்காது.