மத்திய பட்ஜெட்டில் 27 சதவீதமாக இருந்த வரியை 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 4 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்ஜின் திறன் 1500சிசி மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170மிமீ க்குள் இருந்தால் வரி உயர்வில் தப்பிக்க முடியும் .
ஆனால் மஹிந்திராவின் ஸ்கார்பியோ, பொலிரோ, எக்ஸ்யூவி500 போன்றவை வரி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளது. குவோன்ட்டோ மற்றும் சைலோவின் சில மாறுபட்டவைகள் மட்டும் வரி உயர்வில் இருந்து தப்பித்தது.
அவசரகால நடவடிக்கையாக சில மாறுதல் செய்ய முடிவு செய்துள்ளது. மிக பெரிய தாக்கத்தை மஹிந்திரா நிறுவனத்துக்கு இந்த வரி உயர்வு ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கான முழு மாறுதல்களை செய்ய இரண்டு வருடங்கள் ஆகலாம். தனது எதிர்கால திட்டங்களிலும் இதனை கவனத்தில் கொள்ளும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் புதிய டபிள்யூ4 என்ற பேஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த வேரியண்ட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170மிமீ க்கும் குறைவாக இருக்கும். தற்பொழுது விற்பனையில் உள்ள டபிள்யூ6 பேஸ் வேரியண்ட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200மிமீ ஆகும். மேலும் இதன் எஞ்சின் திறன் 2179சிசி ஆகும்.
இந்த புதிய டபிள்யூ4 பேஸ் வேரியண்ட் டஸ்ட்டர் எஸ்யூவிக்கு சவலாக விளங்கும். மேலும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்களை பொருத்தி சில மாடல்களை களமிறக்கவுள்ளதாம்.