யமஹா ரே ஸ்கூட்டரினை அடிப்படையாக கொண்ட ஆண்களுக்கான ரே இசட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேவில் இருந்து சில விதமான மாற்றங்களை செய்து அறிமுகம் செய்துள்ளது. மேலும் இரண்டு 150சிசி பைக்களை அறிமுகம் செய்துள்ளது.
ரே ஸ்கூட்டர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஸ்கூட்டராக வலம் வருகிறது. இதே ஸ்கூட்டரின் முகப்பு மற்றும் சில மாற்றங்களை செய்து ரே இசட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் எஞ்சின் ரே ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த 113சிசி எஞ்சினே ஆகும்.
மேலும் இரண்டு 150சிசி பைக் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. அவை எஸ் இசட்-எஸ் மற்றும் எஸ்இசட்-ஆர்ஆர் ஆகும்.
யமஹா ரே இசட் ஸ்கூட்டர் விலை ரூ.48,555(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
யமஹா 150சிசி எஸ் இசட்-எஸ் விலை ரூ.59,500
யமஹா 150சிசி எஸ் இசட்-ஆர்ஆர் விலை ரூ.62,500