நிசான் மைக்ரா மற்றும் சன்னி கார்களை பிரேக் பிரச்சனை காரணமாக திரும்ப பெற உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது. பிரேக் சிலிண்டரில் நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை இலவசமாக சரிசெய்யவதாக நிசான் தெரிவித்துள்ளது. பிரேக் பிரச்சனையை காரணம் காட்டி விபத்துகள் நடக்கவில்லை. இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள 22188 கார்களை திரும்ப பெற உள்ளது. இவற்றில் மைக்ரா மற்றும் சன்னி என இரண்டும் அடங்கும்.
மேலும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 67,089 கார்களை திரும்ப பெற உள்ளதாம். சன்னி மற்றும் மைக்ரா கார்களை செய்து ரெனோ பல்ஸ் மற்றும் ஸ்காலா என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றது. இவற்றை திரும்ப பெறுவதற்க்கான வாய்ப்புகளும் உள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு இதுபற்றி விவரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.