வருகின்ற மே 24ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு தொடங்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரூ. 29 லட்சத்தில் டிகுவான் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிகுவான் எஸ்யூவி
- ரூபாய் 1 லட்சம் செலுத்தி டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
- 147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
- மே மாதம் டீகுவான் கார் விற்பனைக்கு ரூ. 29 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடல் இந்தியாவில் அமைந்துள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் கடந்த மார்ச் இறுதியில் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு அடுத்த மாத தொடக்க மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
டிகுவான் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 340 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் முதற்கட்டமாக டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இருவிதமான வேரியன்ட்களில் எதிர்பார்க்கப்படுகின்ற டிகுவானில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக சேர்க்கப்பட்டிருக்கலாம். மேலும் ஆஃப் ரோடு வசதிகளுக்கு ஏற்ற அம்சத்தை பெற தனியான மோட் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் எஸ்யூவி மாடலான டிகுவான் காரில் பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றிருப்பதுடன் இந்தியசந்தையில் கம்ஃபோர்ட்லைன் மற்றும் ஹைலைன் என இருவிதமான ட்ரீம்களில் வரவுள்ளது. இன்டிரியரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் வரவுள்ளது. தோற்ற அமைப்பில் 17 அங்குல அலாய் வீல் மற்றும் 18 அங்குல அலாய் வீல் (ஹைலைன் வேரியன்ட்), பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி விளக்குகளுடன் வரவுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஃபார்ச்சூனர் , எண்டேவர் , ட்ரெயில்பிளேசர் , பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலான இந்த எஸ்யூவி காருக்கு முன்பதிவு செய்ய ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டிகுவான் எஸ்யுவி மாடலின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.27 லட்சம் முதல் ரூ.30 லட்சத்துக்குள் அமையலாம்.