2014 டொயோட்டா கரொல்லா இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிக நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா கரொல்லா காரின் உற்பத்தி நிலை படங்கள் மற்றும் தகவல்களை டொயோட்டா வெளியிட்டுள்ளது.
ஃப்யூரியா என்ற கான்செப்ட் காரினை அடிப்படையாக வைத்து 2014 கரொல்லா வெளிவந்துள்ளது. 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சினும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பெட்ரோல் எஞ்சினில் மட்டும் இருக்கும். புதிய முகப்பு தோற்றம், கிரில் மாற்றம், எல்இடி விளக்குகள், புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரீங் முந்தைய ஸ்டீயரீங்கைவிட 5 % வரை மேம்படுத்தப்பட்டுள்ளது.
உட்ப்புற கட்டமைப்பு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுதிரை, எஞ்சின் ஸ்டார்டர் பொத்தான் என மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும்.