ரெனோ டஸ்ட்டர் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற எஸ்யூவி காராக வலம் வருகின்றது. பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்த ஸ்கார்பியோ காரை வீழ்த்தியது. நிசான் நிறுவனத்தின் கீழ் டஸ்ட்டர் வெளிவரவுள்ளது.
ரெனோ டஸ்ட்டர் காரை நிசான் டெரானோ என்ற பெயரில் பெயர் மாற்றி இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது. டஸ்ட்டர் விற்பனை சரிய வாய்ப்புள்ளது. மேலும் டெரானோ மற்றும் டஸ்ட்டர்க்கு கடும் சவால் காத்திருக்கின்றது ஈக்கோஸ்போர்ட் வடிவில் இன்னும் சில தினங்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வரலாம்.
நிசான் டெரானோ டஸ்ட்டரை விட சிறப்பான தோற்றத்துடன் மிக அழகான உட்ப்புற கட்டமைப்புடன் வெளிவரும். மேலும் டஸ்ட்டரைவிட சற்று விலை கூடுதலாக இருக்கலாம்