இந்திய இருசக்கர வாகன சந்தையில் முதன்மையான மாடலாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முன்னேறியுள்ளது. பைக்குகள் பிரிவில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் முதன்மையான இடத்தில் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
ஹீரோ ஸ்பிளென்டர்
- 2106-2017 ஆம் நிதி ஆண்டில் 2,759,835 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- 2106-2017 ஆம் நிதி ஆண்டில் 2,550,830 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவின் இருசக்கர வாகன பிரிவில் முதன்மையான இடத்தை ஆக்டிவா எட்டியுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து ஸ்கூட்டர் சந்தை அபரிதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது. பெண்களுக்கு மட்டும் ஸ்கூட்டர் என்ற நிலை முற்றிலும் மாறி இருபாலருக்கு பொதுவானதாக மாறி வரும் ஸ்கூட்டர்கள் மிக சுலபமாக நெரிசல் மிகுந்த சாலைகளில் கையாளுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதே ஸ்கூட்டர்களின் மிக முக்கியமான பலமாகும்.
கடந்த 2015 -2016 ஆம் நிதி ஆண்டில் ஆக்டிவா ஸ்கூட்டர் 2,466,350 விற்பனை செய்திருந்த நிலையில் 16-17 ஆம் நிதி வருடத்தில் 11.09 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து 2,759,835 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015 -2016 ஆம் நிதி ஆண்டில் ஸ்பிளென்டர் பைக்குகள் 2,486,065 விற்பனை செய்திருந்த நிலையில் 16-17 ஆம் நிதி வருடத்தில் 2.61 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து 2,550,830 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விற்பனை விபர அட்டவனை ஒப்பீடு
மாடல் | 2015-2016 | 2016-2017 | வளர்ச்சி % |
ஹோண்டா ஆக்டிவா | 2,466,350 | 2,759,835 | 11.09 |
ஹீரோ ஸ்பிளென்டர் | 2,486,065 | 2,550,830 | 2.61 |