ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்களை மாதம் ஒரு முறை 750 ரூபாய் மதிப்புள்ள தலைக்கவசத்தை வெறும் 9 ரூபாய்க்கு டிரூம் (Droom) தளம் விற்பனை செய்து வருகின்றது.
வாங்க இங்கே க்ளிக் செய்க – https://www.droom.in/get-set-helmet
ஹெல்மெட் வாங்கலாம்
- டெல்லியைச் சேரந்த டிரூம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் டீலராக செயல்படுகின்றது.
- ஐஎஸ்ஐ தர முத்திரை பதித்த ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்து வருகின்றது.
- மாதம் ஒரு முறை மட்டுமே இந்த சலுகையை வழங்குகின்றது.
ஹெல்மெட் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெல்லியைச் சேர்ந்த டிரூம் எனும் பயன்படுத்திய பழைய வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் மாதம் ஒரு முறை ரூபாய் 9 விலையில் ஹெல்மெட் விற்பனை செய்கின்றது.
ஐஎஸ்ஐ தர முத்திரை சான்றிதழ் பெற்ற இந்த ஹெல்மெட்கள் விலை ரூபாய் 750 ஆகும். தலைக்கவசம் அணிவது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலே இது போன்ற திட்டத்தே மேற்கொண்டு வருவதாக டீரூம் நிர்வாக இயக்குநர் சந்தீப் அகர்வால் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் 21,000 ஆர்டர்களும், கடந்த ஏப்ரல் 18ந் தேதி நடைபெற்ற விற்பனையில் 26,000 ஹெல்மெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தளத்தில் ரூ.750 மதிப்புள்ள ஹெல்மெட் தற்பொழுது ரூ.299 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அடுத்த ஹெல்மெட் குறித்தான விற்பனைக்கு முன்பதிவு செய்து கொள்ள இந்த லிங்கை சொடுக்குக;– https://www.droom.in/get-set-helmet