கடந்த 2016 டெல்லி ஆட்டோ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் கருவிகளை கொண்ட மஹிந்திரா டியூவி300 எண்டூரன்ஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா டியூவி300
- டியூவி300 எஸ்யூவி காரில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினை பெற்றுள்ளது.
- எண்டூரன்ஸ் கிட் விலை ரூபாய் 61 ஆயிரம் மட்டுமே.
- தற்பொழுது டீலர்கள் வாயிலாக டியூவி300 கார் விற்பனை செய்யப்படுகின்றது.
இருவிதமான எஞ்சின் பவரில் டியூவி300 எஸ்யூவி விபரம் பின் வருமாறு :
எம்ஹாக்80 1.5 லிட்டர் 3 சிலிண்டர் கொண்ட 84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 230என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. மேம்படுத்தப்பட்ட மாடலான நூவோஸ்போர்ட் எஸ்யூவி காரில் அதே 1.5 லிட்டர் என்ஜினை ஆற்றலை அதிகரித்து 100 bhp என்ஜினாக மாற்றி எம் ஹாக்100 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
எண்டூரன்ஸ் கிட் காரில் பாடி கிளாடிங், முன்பக்கத்தில் ஒவர்லே கிரில், முன்பக்க பம்பர் ஆப்பிலிக்கு, எல்இடி பனி விளக்குகள், 17 அங்குல அலாய் வீல், அகலமான டயர் போன்றவை உள்ளது. இன்டிரியரில் டூயல் டோன் நிறத்துடன் கிடைக்க உள்ளது. மஹிந்திரா டியூவி300 எண்டூரன்ஸ் கிட் விலை ரூபாய் 61 ஆயிரம் ஆகும்.
சமீபத்தில் டியூவி 300 எஸ்யூவி காரின் விற்பனை இலக்கு 50 ஆயிரம் எண்ணிக்கை கடந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் கூடுதல் இடவசதி பெற்ற டியூவி300 எக்ஸ்எல் மாடலும் சந்தைக்கு வரவுள்ளது.