ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களில் கூடுதல் வசதிகளை பெற்ற ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இரு மாடல்களும் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.
ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ்
- 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது.
- ஃபிகோ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்பயர் ஸ்போர்ட் என்ற பெயரில் கிடைக்கும்.
- இரு மாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
டாப் டைட்டானியம் வேரியன்டில் மட்டுமே இடம்பெற்றுள்ள சிறப்பு ஸ்போர்ட்ஸ் மாடல்களில் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 88hp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 100hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. இரண்டிலுமே 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஃபிகோ ஸ்போர்ட்ஸ் காரின் முகப்பில் வழக்கமாக கிடைக்கின்ற மாடலின் கிரிலுக்கு மாற்றாக தேன்கூடு கிரில் போன்ற அமைப்புடன், கருப்பு பீசல் கொண்ட வட்ட வடிவ பனி விளக்கு அறை, 15 அங்குல அலாய் வீல், ஓஆர்விஎம் கவர் கருப்பு நிறத்திலும் , ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் ரூஃப் ரெயில்கள் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.
ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் காரில் முகப்பில் புதிய கிரில் மற்றும் பாடி ஸ்டிக்கரிங் போன்றவற்றை பெற்றிருப்பதுடன் 15 அங்குல அலாய் வீல், போன்றவற்றை பெற்றுள்ளது.
இரு மாடல்களின் உட்புறத்திலும் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டு சிவப்பு நிற ஸ்டிச்சிங் செய்யப்பட்ட இருக்கைகளை கொண்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.
ஃபிகோ ஸ்போர்ட்ஸ் விலை ரூ. 6.32 லட்சம் முதல் ரூபாய் 7.21 லட்சம் வரை ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் மாடல் ரூபாய் 6.51 லட்சம் முதல் ரூபாய் 7.60 லட்சம் வரை ஆகும்.