ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த பிஎஸ் 4 விதிமுறைகளுக்கு ஏற்ற எஞ்சினை பெற்ற புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. 7.8 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7சிசி எஞ்சினை பெற்றுள்ளது.
2017 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்
- பிஎஸ் 4 மற்றும் ஏஹெச்ஓ ஆப்ஷனை புதிய ஸ்போர்ட் பைக் பெற்றுள்ளது.
- 7.8 hp ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
- லிட்டருக்கு 95 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.
புதிய பாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சினை பெற்ற டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் அதிகபட்சமாக 7.8 hp ஆற்றல் மற்றும் 7.8 Nm டார்க்கை வெளிப்படுத்தும். இதில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்த பைக்கில் சிவப்பு, வெள்ளை, கருப்பு, பச்சை, கிரே, இன்டிகோ மற்றும் கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பெற்ற 130 மிமீ டிரம் பிரேக் ஆப்ஷனுடன் , பின்புறத்தில் இரட்டை சாக் அப்சார்பரை பெற்று டயரில் 110 மிமீ டிரம் பிரேக் சேர்க்கப்பட்டுள்ளது.
கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் ஆப்ஷன்களுடன் ஸ்போக் மற்றும் அலாய் வீலை பெற்ற வகையில் விற்பனைக்கு கிடைக்கும்.
டிவிஎஸ் ஸ்போர்ட் விலை
ஸ்போர்ட் பைக் ரூ. 37,580 (கிக் ஸ்டார்ட்/ஸ்போக் வீல்)
ஸ்போர்ட் பைக் ரூ. 43,236 (கிக் ஸ்டார்ட்/அலாய் வீல்)
ஸ்போர்ட் பைக் ரூ. 46,924 (செல்ஃப் ஸ்டார்ட்/அலாய் வீல்)
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )