பாரத் ஸ்டேஜ் 4 மாசு தர எஞ்சினை பெற்ற புதிய டிவிஎஸ் அப்பாச்சி வரிசை பைக்குகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி பைக்கில் ஏஹெச்ஒ ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.
2017 டிவிஎஸ் அப்பாச்சி
- புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 , அப்பாச்சி 180 மற்றும் அப்பாச்சி 200 என மூன்று மாடல்களும் பிஎஸ் 4 தரத்தை பெற்று விளங்குகின்றது.
- ஆர்டிஆர் அப்பாச்சி 180 மற்றும் அப்பாச்சி 200 பைக்குகளில் ஏபிஎஸ்ஆப்ஷனலாக கிடைக்கின்றது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அப்பாச்சி வரிசை பைக்குகளில் இடம்பெற்றுள்ள அப்பாச்சி 160 , அப்பாச்சி 180 மற்றும் அப்பாச்சி 200 என மூன்று மாடல்களும் பிஎஸ் 4 எஞ்சினை பெற்றுள்ளது.
ஆர்டிஆர் அப்பாச்சே 160 பைக்கில் இடம்பெற்றுள்ள 159.7 cc எஞ்சினை பெற்று 15.2 PS ஆற்றல் மற்றும் 13.1 Nm டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஆர்டிஆர் அப்பாச்சே 180 பைக்கில் இடம்பெற்றுள்ள 177.4 cc எஞ்சினை பெற்று 17.02 PS ஆற்றல் மற்றும் 15.5 Nm டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஆர்டிஆர் அப்பாச்சே 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி வரிசை விலை பட்டியல்
- TVS Apache RTR 160 ரூ.75,089
- TVS Apache RTR 180 ரூ. 80,019
- TVS Apache RTR 180 ரூ.90,757 ( ABS)
- TVS Apache RTR 200 ரூ. 92,215
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி )