புதிய பிஎஸ் 4 எஞ்சின் மற்றும் புதிய நிறங்களை பெற்ற 2017 யமஹா FZ , FZ-S மற்றும் ஃபேஸர் பைக்குகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 13.2 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினை பெற்று விளங்குகின்றது.
யமஹா FZ
- பாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சின் மற்றும் ஏஹெச்ஓ ஆப்ஷனை மூன்று மாடல்களும் பெற்றுள்ளது.
- எஞ்சின் ஆற்றலில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.
- ரூபாய் 530 வரை மூன்று பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக இடம்பெற்றுள்ள பாரத் ஸ்டேஜ் 4 மாசு விதிகளுக்கு ஏற்ற எஞ்சினை பெற்றதாக வந்துள்ள யமஹா FZ , FZ-S மற்றும் யமஹா ஃபேஸர் பைக்குகளில் 13.2 bhp ஆற்றலுடன் , 12.8 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் FI எஞ்சினை பெற்று விளங்குகின்றது.
புதிய FZ FI பைக்கில் சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது. FZ-S FI மாடல் நான்கு புதிய நிறங்களாக கிரே, சிவப்பு, சியான் மற்றும் வெள்ளை போன்றவற்றுடன் முந்தைய சிறப்பு மேட் பச்சை நிறமும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.
2017 ஃபேஸர் பைக்கில் புதிய நிறங்களாக கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2017 யமஹா FZ மற்றும் ஃபேஸர் பைக் விலை பட்டியல்
- புதிய FZ FI பைக் விலை ரூபாய் 80,726/-
- 2017 புதிய FZ-S FI பைக் விலை ரூபாய் 82,789/- (புதிய நிறங்கள்)
- FZ-S FI விலை ரூபாய் 83,789/- (சிறப்பு மேட் பச்சை நிறம்)
- 2017 ஃபேஸர் பைக் விலை ரூபாய் 87,935/