2014 ஹோண்டா ஜாஸ் காரின் அதிகார்வப்பூர்வ படங்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனை குறைவின் காரணமாக தற்காலிகமாக ஜாஸ் உற்பத்தியை ஹோண்டா நிறுத்தியது.
வரவிருக்கும் மூன்றாம் தலைமுறை ஜாஸ் காரில் வடிவமைப்பில் பல மாற்றங்களை தந்துள்ளனர். முந்தைய மாடலை விட முகப்பில் பல மாற்றங்களை தந்துள்ளது. மேலும் பின்புற காம்பினேஷன் போன்றவற்றிலும் மாறுதல்களை தந்துள்ளது.
மிக சிறப்பான இடவசதி கொண்ட காராக ஜாஸ் தாராளமாக விளங்கும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்துமிருக்காது. மேலும் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தரக்கூடிய ஹைபிரிட் காராக ஜாஸ் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல இந்தியாவிலும் விற்பனை செய்யப்படலாம்.
ஜாஸ் காரின் மிக பெரும் குறையாக இருந்து வந்த டீசல் என்ஜின் இல்லாத குறையை ஹோண்டா நிவர்த்தி செய்யப்போகின்றது. 2014 ஜாஸ் காரில் அமேஸ் காரில் பயன்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
ஹேட்ச்பேக் சந்தையில் மிக பெரிய சவாலைத் தரக்கூடிய விலையில் ஹோண்டா ஜாஸ் விற்பனைக்கு வரவுள்ளது. ராஜஸ்தான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்க்கான உதிரிபாகங்களை தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்கின்றனர்.