ரூ.13.41 லட்சம் ஆரம்ப விலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் எடிசன் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பதிப்பாக கூடுதல் வசதிகளை பெற்ற மாடல் கிடைக்கும்.
மஹிந்திரா ஸ்கார்பியோ
- 4×2 மற்றும் 4×4 என இரு டிரைவ் ஆப்ஷன்களிலும் ஸ்கார்பியோ அட்வென்ச்சர் எடிசன் கிடைக்க உள்ளது.
- எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
- கூடுதல் வசதிகள் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.
அட்வென்ச்சர் பதிப்பில் கன் மெட்டல் அலாய் வீல், ORVM சைடு இன்டிகேட்டர், சில்வர் மற்றும் வெள்ளை வண்ணத்திலான கலைவையை பெற்ற அட்வென்ச்சர் எடிசன் சிறப்பு பாடி கிராபிக்ஸ் உள்பட டெயில் விளக்கில் ஸ்மோக்ட் அம்சம் போன்றவற்றை பெற்றுள்ளது.
அட்வென்ச்சர் பதிப்பின் இன்டிரியரில் கருப்பு மற்றும் நீலம் வண்ணத்திலான ஃபேபரிக் இருக்கைள், லெதர் உறை சுற்றப்பட்ட ஸ்டீயரியங் வீல் , கியர் லிவர் ஆர்ம்ரெஸ்ட் , டேஸ்போர்டு போன்றவற்றில் அட்வென்ச்சர் பேட்ஜ் எடிசன் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6-inch தொடுதிரை ஏவிஎன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.
120hp பவரை வெளிப்படுத்தும் 2.2-litre mHawk டீசர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆற்றலை 2 சக்கரங்கள் மற்றும் 4 சக்கரங்களுக்கு எடுத்து செல்லும் அமைப்புகளை பெற்றுள்ள ஸ்கார்பியோவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்இடம்பெற்றுள்ளது.
சாதரன மாடலை விட ரூபாய் 40,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ள இந்த சிறப்பு அட்வென்ச்சர் ரக ஸ்கார்ப்பியோ மாடலின் விலை பட்டியல்..
- ரூபாய் 13.1 லட்சம் (4×2)
- ரூபாய் 14.2 லட்சம் (4×4)