இந்தியாவின் முதன்மையான பைக் தயாரிப்பாளாரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மார்ச் மாத முடிவில் 6, 09,951 அலகுகளை விற்பனை செய்து 2016 மார்ச் மாதத்தை விட 0.53 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஹீரோ விற்பனை விபரம்
இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம் கடந்த 16-17 நிதி வருடத்தில் 66,63,903 பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 15-16 நிதி ஆண்டில் 66,32,322 விற்பனை செய்திருந்த நிலையில் இதனுடன் ஒப்பீடுகையில் 0.48 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பெற்றுள்ளது.
FY 2016-17 | FY 2015-16 | வளர்ச்சி |
---|---|---|
66,63,903 அலகுகள் | 66,32,322 அலகுகள் | 0.48% |
மார்ச் மாத விற்பனை
ஹீரோ நிறுவனம் 6 லட்சம் விற்பனை இலக்கை 6வது முறையாக 16-17 நிதி ஆண்டில் கடந்து மாரச் மாதமும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 மார்ச் மாத முடிவில் 6, 06,542 பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்திருந்த நிலையில் இந்த வருட மார்ச் மாத முடிவில் 0.53 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்ற 6, 09,951 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மாரச் 2017 | மார்ச் 2016 | வளர்ச்சி |
---|---|---|
6, 09,951 | 6, 06,542 | 0.53% |
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரம் விரைவில் வெளியிடப்படும்.. இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்…