இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட பை5கு மற்றும் ஸ்கூட்டர்களின் விலை பட்டியல் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யமஹா பி.எஸ் 4
- தோற்றம் மற்றும் ஆற்றல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை
- அனைத்து யமஹா மாடல்களிலும் ஏஎச்ஓ நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.
- சிறிய அளவிலான விலை உயர்வினை சந்தித்துள்ளது.
சமீபத்தில் விற்பனைக்கு வந்த 250சிசி யமஹா FZ25 பைக் பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற யமஹா மாடல்கள் அனைத்தும் பிஎஸ் 4 எஞ்சினுக்கு மாற்றப்பட்டுள்ளது.
யமஹாவின் FZ, FZ-S, ஃபேஸர் மற்றும் SZ RR , மேலும் ஸ்கூட்டர் வரிசை மாடல்களான பேசினோ மற்றும் சிக்னஸ் ஆல்பா என அனைத்து மாடல்களும் பிஎஸ் 4 தரத்துக்கு மாறியுள்ளது. மேலும் தொடர்ந்து ஒளிரும் தன்மை பெற்ற ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் அனைவருமே பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில் இறுதியாக யமஹா நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
யமஹா மாடல்கள் | விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) |
---|---|
FZ-S | ரூ. 82,789 |
FZ | ரூ. 80,726 |
ஃபேஸர் | ரூ. 87,935 |
SZ | ரூ.67,694 |
ஃபேசினோ | ரூ. 54,330 |
சிக்னஸ் ஆல்ஃபா (Disc) | ரூ. 54,586 |
சிக்னஸ் ஆல்ஃபா (STD) | ரூ.51,369 (automobiletamilan) |
இருப்பில் உள்ள அனைத்து பி.எஸ் 3 வாகனங்களுக்கும் பல்வேறு சலுகைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. குறிப்பாக ஹோண்டா நிறுவனம் அதிகபட்சமாக ரூ.22,000 வரையும் , பரிமியம் ரக பைக்குகளுக்கு ரூ. 3 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிங்க – பிஎஸ் 3 சலுகைகள் மற்றும் விபரம்