இந்தோனேசியா பைக் ஆர்வலர் பஜாஜ் பல்ஸர் 150 UG2 பைக்கினை ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்காக மாற்றி அசத்தியுள்ளனர். அட்வென்ச்சர் பைக்காக ஹிமாலயன் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பல்ஸர் 150 பைக்
- 150சிசி பைக் சந்தையில் விற்பனை பஜாஜ் பல்ஸர் 150 செய்யப்படுகின்றது.
- அட்வென்ச்சர் ரக பிரிவில் 411சிசி என்ஜினை பெற்ற மாடலாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விளங்குகின்றது.
ஹிமாலயன் பைக்கில் 24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.
பல்ஸர் 150 UG2 பைக்கில் 143.9 சிசி மாடலில் 13.52 PS ஆற்றலுடன் 12.28 Nm டார்க்கினை வெளிப்படுத்துவதுடன் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.
பல்சர் 150 பைக்கில் ஹிமாலயன் பைக் போன்றே கூடுதலான ஆக்செரீஸ்கள் மற்றும் தோற்ற அமைப்புகளை மாற்றியமைத்து ஹிமாலயனுக்கு இணையான தோற்ற அமைப்பினை பெற்றதாக விளங்குகின்றது.
ஹிமாலயன் பைக்கை போன்றே வட்டவடிவ ஹெடெலேம்ப் ஆப்ஷனுடன் எல்இடி விளக்குகளை பெற்று அதனை போன்ற வெள்ளை நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டு முன்புறத்தில் ஆஃப் ரோடு பைக்குகளுக்கு ஏற்ற வகையில்அமைந்துள்ள சஸ்பென்ஷன் சிஸ்டத்துடன் சேடில்பேக்ஸ் உள்பட பல வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது.
படங்கள் உதவி – fb/iqmutaqin