ஹோண்டா கார் நிறுவனத்தின் பிரியோ காரினை அடிப்படையாக கொண்ட மொபிலியோ எம்பிவி காரினை ஹோண்டா இந்தினோசியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.
பிரியோ அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மொபிலியோ அமேஸ் மற்றும் பிரியோ காரின் முகப்பினை ஏற்றுக்கொள்ளமால் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மிக சிறப்பான இடவசதியினை கொண்ட காராக மொபிலோ விளங்கும் இதன் நீளம் 4390மிமீ ஆகும். 185மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸை கொண்டிருக்கும். மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள மொபிலியோ வாடிக்கையாளர்களின் மத்தியில் மிக பெரும் வரவேற்பினை பெறும்.
இந்தோனேசியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வெளிவரவுள்ளது. மேலும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இந்தியாவில் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரவுள்ளது.