டாடா நானோ காரில் சில மாற்றங்களை செய்து டெல்லி போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர சேவைப் பிரிவு வாகனமாக இணைத்துள்ளது.
மிக நெரிசலான மற்றும் குறுகலான சாலைகளில் நானோ எளிதில் செல்ல வழி வகுக்கும் என்பதால் இந்த முடிவினை டெல்லி போலீசார் எடுத்துள்ளனர். இந்த வாகனத்தினை முற்றிலும் இயக்கப்போவது பெண் போலீஸ் டிரைவர்களே ஆகும்.
இந்த அவசர வாகனத்தில் முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். வெள்ளை, நீளம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்கள் கலந்து நானோ விளங்கும். மேலும் டெல்லி போலீசாரின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.