சாதாரண ரெனோ க்விட் காரில் தோற்ற மாற்றத்துடன் கூடுதல் வசதிகளுடன் ரெனோ க்விட் கிளைம்பர் ரூ.4.30 லட்சத்தில் விற்பனைக்கு வந்ததுள்ளது.
ரெனோ க்விட் கிளைம்பர்
தோற்ற அமைப்பில் கம்பீரத்தை அதிகரிக்கும் நோக்கில் கூடுதலான வசதிகளை கொண்ட ரெனோ க்விட் கிளைம்பர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 1.0லி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.
1.30 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ள ரெனோ க்விட் காரில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனுகளுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள கூடுதல் துனை கருவிகள் மற்றும் இன்டிரியரில் சில கூடுதல் வசதிகள் பெற்று விளங்குகின்ற கிளைம்பர் காரில் 67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிமீ ஆகும்.
டாப் வேரியன்ட் RXT(O) மாடலில் மட்டுமே கிடைக்க உள்ள கிளைம்பரில் நீல வண்ணத்திலான க்விட் காரில் ஒஆர்விஎம் , ரூஃப் ரெயில்கள் , ஆரஞ்சு வண்ணம் சேர்க்கப்படுள்ளது. மேலும் 6 ஸ்போக் கொண்ட 15 அங்குல அலாய் வீல் , கிளைம்பர் பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கரிங் போன்றவற்றை பெற்ற்றுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் ஆரஞ்சு வண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அசென்ட்ஸ் ,கருப்பு வண்ண சென்ட்ரல் கன்சோல் ,ஹெட்ரெஸ்ட் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன் வசதி , ம்யூசிக் பிளேயர் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.
க்விட் கிளைம்பர் மாடல் நீலம் , புரோன்ஸ் மற்றும் கிரே என மூன்று வண்ணங்களுடன் சாதரன மாடலை விட ரூ.29,000 வரை கூடுதலாக அமைந்து ரூ.4.30 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
க்விட் கிளைம்பர் விலை பட்டியல்
- 1.0L MT – ரூ.4.30 லட்சம்
- 1.0L AT -ரூ.4.60 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)