2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வால்வோ XC60 எஸ்யூவி மாடல் உலகின் மிக பாதுகாப்பான கார்களில் முன்னணி வகிக்கும் மாடலாக விளங்கும். புதிய வால்வோ எக்ஸ்சி60 இந்தியாவில் இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரலாம்.
வால்வோ XC60 எஸ்யூவி
2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ எக்ஸ்சி60 காரின் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலாக வந்துள்ள புதிய எஸ்யூவி வால்வோ நிறுவனத்தின் பெரிய கார்களுக்கான SPA பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும்.
எக்ஸ்சி60 காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாக விளங்குகின்றது. குறிப்பாக இந்த காரில் அமைந்துள்ள நவீன செமி ஆட்டோமேட்டிக் அமைப்பின் வாயிலாக 130 கிமீ வேகத்திலும் பிரேக் ஆசில்ரேட்டர் மற்றும் ஸ்டீயரிங் போன்றவற்றை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும்அமைப்பினை கொண்டதாக விளங்குகின்றது. முன்பக்க மோதல் , பாதசாரிகள் பாதுகாப்பு போன்ற பல வசதிகளை பெற்றதாக உள்ளது.
எக்ஸ்சி90 காரின் தோற்ற உந்துதலை அடிப்படையாக கொண்ட இந்த மாடல் முந்தைய மாடலை விட கூடுதலான நீளம் மற்றும் வீல்பேஸ் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது. இன்டிரியர் அமைப்பில் எக்ஸ்சி90 காரின் கேபின் அமைப்பினை போன்ற வடிவமைக்கப்பட்டுள்ள இதன் டேஸ்போர்டில் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.
XC60 இன்ஜின்
சர்வதேச அளவில் புதிய வால்வோ XC60 காரில் 187hp ஆற்றலை வெளிப்படுத்தும் D4 மற்றும் 232hp D5 என்ஜினுடன் 2.0 டீசல் என்ஜின் பெற்றுள்ளது. மேலும் பெட்ரோல் ஆப்ஷனில் 251hp T5 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 401hp T8 பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைபிரிட் மாடல் இடம்பெற்றிருக்கும். இதுதவிர பிளக்இன் ஹைபிரிட் ஆப்ஷனும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வரவுள்ளது.
இந்தாண்டின் இறுதியில் வால்வோ எக்ஸ்சி60 இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. வால்வோ எக்ஸ்சி60 காரின் போட்டியாளர்கள் ஆடி Q5, பிஎம்டபிள்யூ X3, ஜாகுவார் F-Pace மற்றும் பென்ஸ் GLC போன்ற எஸ்யூவி மாடல்களாகும்.
வால்வோ எக்ஸ்சி60 கார் படங்கள்
42 படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
[foogallery id=”17372″]