பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரவுள்ளதால் டீசல் மாடல் அமேஸ் காரை விட பரபரப்பினை ஏற்ப்படுத்த உள்ளது. அதற்க்கு காரணம் அதன் மைலேஜ் தான்..
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் வெளிவரும். அமேஸ் காரில் உள்ள டீசல் என்ஜினே சிட்டி காரிலும் இருக்கும்.
ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் டீசல் காரில் நிரந்தரமாக இருக்கும். பெட்ரோல் காரில் இ வேரியண்டில் மட்டும் இவை இருக்காது.
இ, எஸ், எஸ்வி, வி, விஎஸ் என 5 விதமான மாறுபட்டவைகளில் புதிய சிட்டி கார் கிடைக்கும். டாப் மாடலான விஎஸ் வேரியண்டில் பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்டிருக்கும்.
இ மற்றும் எஸ் வேரியண்டில் டிரைவர் காற்றுப்பைகள் மட்டும் இருக்கும் மற்ற வகைகளில் இரண்டு காற்றுப்பைகள் இருக்கும்.
விலை விபரங்களை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை..
டீசல் சிட்டி காரின் மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ இருக்கலாம்…