சிறிய ரக கார்களின் வரி 12 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 8 சதவீதமாக குறைந்துள்ளது.
எஸ்யூவி கார்களின் வரி 30 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 24 சதவீதமாக குறைந்துள்ளது.
செடான் கார்களின் வரி 24-27 சதவீதமாக இருந்த வரி தற்பொழுது 20-24 சதவீதமாக குறைந்துள்ளது.
மாருதி
மாருதி நிறுவனத்தின் அனைத்து வகை கார்களுக்கும் ரூ.8100 முதல் 31000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட செலிரியோ காருக்கும் பொருந்தும்.
ஸ்விஃப்ட் காரின் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.4.42 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.4.58 லட்சமாகும்.
டிசையர் காரின் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.4.58 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.5.03 லட்சமாகும்.
வேகன்ஆர் தற்பொழுதைய ஆரம்ப விலை ரூ.3.48 லட்சம் ஆகும் முந்தைய விலை ரூ.3.61 லட்சமாகும்.
ஆல்டோ 800 காரின் ஆரம்ப விலை ரூ.2.42 லட்சம் ஆகும்.
செலிரியோ ரூ.3.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த செலிரியோ தற்பொழுது ரூ.3.76 லட்சமாக குறைந்துள்ளது. ஆட்டோ டிரான்ஸ்மிஷன் செலிரியோ காரின் தற்பொழுதைய விலை விபரம் விஎக்ஸ்ஐ ரூ.4.14 லட்சமாகாவும் இசட்எக்ஸ்ஐ மாடல் ரூ.4.43 லட்சம் ஆகும்.
செவர்லே
செவர்லே நிறுவனத்தின் கார்கள் ரூ12,000 முதல் ரூ.49,000 வரை குறைந்துள்ளது
மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து கார்களின் மாடலும் ரூ.13000 முதல் 49000 வரை குறைந்துள்ளது. சாங்யாங் ரெக்ஸ்டான் ரூ.92000 வரை குறைந்துள்ளது.
ஹூண்டாய்
ஹூண்டாய் கார்களின் விலை ரூ. 10000 முதல் ரூ1.35 லட்சம் வரை குறைந்துள்ளது.
ஃபோர்டு
ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோஸ்போர்ட் விலை ரூ.26000 குறைந்துள்ளது. இதனால் ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு அதிகரிக்கும் மேலும் காத்திருக்கும் காலம் இன்னும் அதிகரிக்கும். என்டோவர் எஸ்யூவி ரூ.1 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் விலை ரூ.18000 முதல் ரூ.31000 வரை குறைந்துள்ளது. வென்டோ காரின் விலை ரூ. 14500 முதல் ரூ.27000 வரை குறைந்துள்ளது. ஜெட்டா காரின் விலை ரூ.38000 முதல் ரூ.51000 வரை குறைந்துள்ளது.