ரூ. 4.83 லட்சம் விலையில் டாடா டியாகோ ஏஎம்டி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. டாப் வேரியன்ட் XZA மற்றும் XTA என இரு பிரிவில் வந்துள்ள டியாகோ ஏஎம்டி மாடலில் ஸ்போர்ட் மற்றும் சிட்டி என இரு விதமான மோடினை பெற்றுள்ளது.
டியாகோ ஏஎம்டி
பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் எதிர்பார்த்த நிலையில் பெட்ரோல் மாடலின் ஒரே வேரியன்ட் விபரங்கள் மட்டுமே வந்துள்ளது.. டீசல் மாடலில் தாமதமாகவோ ஏஎம்டி காரும் விற்பனைக்கு வரலாம். டாடாவின் ஸெஸ்ட் , நானோ கார்களை தொடர்ந்து மூன்றாவது ஏஎம்டி பொருத்தப்பட்ட மாடலாக டியோகோ வந்துள்ளது.
1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் வாயிலாக 84 பிஎச்பி பவருடன், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தரவல்லதாக உள்ளது. புதிதாக வந்துள்ள 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆட்டோமேட்டிக், நியூட்ரல், ரிவர்ஸ் மற்றும் மேனுவல் போன்ற மோட்களை பெற்று விளங்குகின்றது.
டாடாவின் ஈசி கியர் ஷிஃப்ட் ஏஎம்டி முறையானது சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. சிட்டி மோட் சிறப்பான மைலேஜ் தரவல்லதாகவும் , ஸ்போர்ட் மோட் சிறப்பான செயல்திறனை கொண்டதாகவும் விளங்கும்.
டியாகோ ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலின் போட்டியாளர்களாக மாருதி செலிரியோ , கிராண்ட் ஐ10 மற்றும் க்விட் போன்ற கார்கள் விளங்கும்.
டாடா டியாகோ ஏஎம்டி கார் விலை
Tiago XZA – ரூ. 4.83 லட்சம்
Tiago XTA – ரூ. 5.30 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் சென்னை)