எதர்(Ather) நிறுவனத்துடன் இணைந்து ஃபிளிப்கார்ட் வேகமான எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இணைந்து ரூ.6.19 கோடி முதலீடு எதர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டைப் மாடலினை வெளியிட்டுள்ளனர். ஆன்டராய்டு அடிப்படையாக கொண்ட டேஸ்போர்டு, நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தயாரிக்க உள்ளனர்.
இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 75கீமி ஆகும். மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்பொழுதுள்ள பெட்ரோல் ஸ்கூட்டரை விட 15கிலோ எடை குறைவாக இருக்கும். இந்த பேட்டரி 15கிலோ எடை இருக்கும். இந்த பேட்டரின் ஆயுட்காலம் 50000கீமி ஆகும்.