டாடா நிறுவனத்தின் சபாரி ஸ்ட்ரோம் எஸ்யூவி காரின் கஸ்டமைஸ் மாடல் ஆட்டோபெர்பார்மன்ஸ் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றமும் இல்லாமல் தோற்றத்தில் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது.
முகப்பில் புதிய பம்பர் மேலும் இன்ட்கிரேட்ட் எல்இடி மற்றும் பனி விளக்குகள் போன்றவை உள்ளன. பானட்டில் ஹூட் ஸ்கூப் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ரோம் பக்கவாட்டில் கருப்புநிற கிளாடிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூஃபில் இரண்டு ஃபோக் லைட்டுகள் பொருத்தியுள்ளனர். மேலும் ஆஃப் ரோடு அனுபவத்தினை 17 இன்ச் பிளாக் ஆலாய் வீல் பயன்படுத்தியுள்ளனர்.
2.2 லிட்டர் சிஆர்டிஐ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இந்த கஸ்டமைஸ் மாடல் நேரடியான விற்பனைக்கு இல்லை.
இதுபோன்ற ஸ்ட்ரோம் எஸ்யூவி கஸ்டமைஸ் செய்ய ரூ3-3.5லட்சம் வரை செலவாகும். இவற்றை பெற உங்க டீலரிடம் அனுகவும்.