தங்கம் விற்கின்ற விலையில் தங்கத்தினால் சைக்கிள் செய்து அசத்தியுள்ளது இங்கிலாந்தை சேர்ந்த கோல்ட்ஜெனி நிறுவனம் தங்கத்தால் மதிவண்டியை இழைத்துள்ளது.
கோல்ட்ஜெனி நிறுவனம் தங்கத்தினால் இழைக்கப்பட்ட பல பொருட்களை செய்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன், கடிகாரம், ஐ-பாட்ஸ் ஐ-போன் போன்றவற்றை தங்கம், காப்பர், குரோம்,பிளாட்டினம் போன்றவற்றை பயன்படுத்தி வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப தயாரிக்கின்றது.
24 கேரட் தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த சைக்கிளின் விலை ரூ,2.47 கோடியாகும். அதாவது பல சொகுசு கார்களின் விலையை விட அதிகம்.
மேலும் வைரம், பிளாட்டினம் போன்றவற்றால் உருவாக்க வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப தயாரிக்க உள்ளனராம்.
தகவல்;dailymail.co.uk