இந்தியாவில் ரெனோ நிறுவனம் புதிய லாட்ஜி எம்பிவி காரினை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்பொழுது சோதனை ஒட்டத்தில் உள்ள லாட்ஜி எம்பிவி வரும் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும்.
லாட்ஜி எம்பிவி பற்றி சில முக்கிய விபரங்களை ரெனோ வெளியிட்டுள்ளது. சிறப்பான தோற்றத்தினை கொண்டுள்ள ரெனோ லாட்ஜி எம்பிவி பல கார்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் குறிப்பாக எர்டிகா மற்றும் மொபிலியோ போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
லாட்ஜி காரில் 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 85 பிஎச்பி ஆகும். மேலும் டஸ்ட்டர் காரில் உள்ள பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரலாம்.
வரும் மார்ச் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம். லாட்ஜி எம்பிவி காரின் விலை ரூ8-11 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.