ஃபோக்ஸ்வேகன் பீட்டல்
ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் மிகவும் சிறப்புகள் பெற்ற காரான பீட்டல் கார் வரும் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வருகை; 2015 தொடக்கம்
விலை; ரூ 25- 30 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; பிஎம்டபிள்யூ மினி கூப்பர், ஃபியட் அபார்த் 500
ஃபியட் அபார்த் 500
ஃபியட் கார் நிறுவனத்தின் அபார்த் மாடல் மிகவும் பாரம்பரியமான தோற்றத்தினை கொண்ட காராக விளங்கி வருகின்றது. 1.4 லிட்டர் ட்ரபோசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
வருகை; 2015 இறுதி
விலை; ரூ 24- 28 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; பிஎம்டபிள்யூ மினி கூப்பர், ஃபோக்ஸ்வேகன் பீட்டல்
ஹோண்டா ஜாஸ்
மீண்டும் இந்தியாவில் புதிய ஹோண்டா ஜாஸ் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஜாஸ் டீசல் மாடலில் விற்பனைக்கு வரவுள்ளதால் மிகவும் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வருகை; 2015 தொடக்கம்
விலை; ரூ 6- 9 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; போலோ, எலைட் ஐ20, ஸ்விஃப்ட்
டாடா நானோ டீசல்
உலகின் விலை மலிவான நானோ காரில் டீசல் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் நானோ காரின் மேம்படுத்தப்பட மாடலாகவும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வருகை; 2015 மத்தியில்
விலை; ரூ 1.8- 2.5லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஆல்டோ 800
டாடா போல்ட்
டாடா கார் நிறுவனத்தின் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிவரும் போல்ட் கார் வரும் ஜனவரி 20 விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்றது.
வருகை; 2015 ஜனவரி 20
விலை; ரூ 4- 7 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஐ10, ஸ்விஃப்ட்
ஃபோர்டு ஃபிகோ
புதிய ஃபிகோ கார் வரும் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் காராகும். தற்பொழுதுள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட புதிய ஃபிகோவாக விளங்கும்.
வருகை; 2015 இறுதி
விலை; ரூ 4- 8 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஐ10, ஸ்விஃப்ட், போல்ட், பீட்
மாருதி செலிரியோ டீசல்
மாருதி கார் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆட்டோமெட்டிக் செலிரியோ காரில் டீசல் என்ஜினுடன் விற்பனைக்கு வரலாம்.
வருகை; 2015 இறுதி
விலை; ரூ 4- 6 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஃபிகோ, பீட்
Upcoming Hatchback cars in India