மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஷைன் எஸ்பி பைக் மாடல் ரூ.70,926 சென்னை ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎஸ் 4 எஞ்சின் , ஏஹெச்ஓ , ஹெச்இடி டயர் போன்ற அம்சங்களை 2017 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பெற்றுள்ளது.
ஹோண்டா ஷைன் எஸ்பி
புதிய ஹோண்டா ஷைன் எஸ்பி தோற்ற அமைப்பில் வேறு எவ்விதமான மாற்றங்களையும் பெறாமல் சில கூடுதலான பாடி கிராபிக்ஸ் , தானியங்கி முறையில் ஒளிரும் முகப்பு விளக்கு , ஹெச்இடி டயர் போன்றவற்றுடன் புதிதாக நீலம் மற்றும் சிவப்பு வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.
10.16 பிஹெச்பி பவரையும் ,10.30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ஷைன் SP பைக்கில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சாதரன சிபி ஷைன் மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள எஸ்பி பைக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள முக்கிய அம்சமான HET டயர் வாயிலாக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.
ஹெச்இடி டயர் என்றால் என்ன ?
ஹோண்டா டூவிலர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள HET டயர் நுட்பம் மிக சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட டயர்களை வழங்குவதனால் 15 சதவீதம் முதல் 20 சதவீத வரையிலான சக்கரம் உரளுவதனால் ஏற்படும் இழப்பினை கட்டுப்படுத்துகின்றது. இதன் காரணமாக எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கின்றது.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் காம்பி பிரேக்கிங் அமைப்பினை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.
2017 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி விலை பட்டியல்
Model | Ex-Showroom | On-Road |
---|---|---|
CB SHINESP – DLX | ரூ. 65889 | ரூ. 73388 |
CB SHINESP – STD | ரூ. 63389 | ரூ. 70661 |
CB SHINESP – CBS | ரூ. 67890 | ரூ. 75571 |
CB SHINESP – CBS (BS-IV) | ரூ. 68134 | ரூ. 75838 |
CB SHINESP – DLX (BS-IV) | ரூ. 66133 | ரூ. 73654 |
CB SHINESP – STD (BS-IV) | ரூ. 63634 | ரூ. 70926 |
( அனைத்தும் சென்னை ஆன்-ரோடு விலை )