இந்தியாவில் ரெனோ கேப்டூர் எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் ரெனோ நிறுவனம் தீவர சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. செப்டம்பர் மாத மத்தியில் கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெனோ கேப்டூர் எஸ்யூவி
விற்பனையில் உள்ள டஸ்ட்டர் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கேப்டூர் பல்வேறு வசதிகளை கொண்டதாக இருக்கும். ரஷ்யா சந்தையில் விற்பனையில் உள்ள கேப்டூர் க்ராஸ்ஓவர் கார்களுக்கு உரித்தான வடிவ தாத்பரியங்களை பெற்று முகப்பில் நேர்த்தியான கருப்பு வண்ண கிரிலுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.
இன்டிரியரை இருவண்ண கலவையிலான டேஸ்போர்டு , 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன நேவிகேஷன் ,ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்பட பல நவீன வசதிகளை கொண்டதாக விளங்கும்.
டஸ்ட்டரில் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு 108 ஹெச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேகமேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஈசி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். மேலும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலும் வரும் வாய்ப்புகள் உள்ளது.
எக்ஸ்யூவி500 , க்ரெட்டா ,டூஸான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக கேப்டூர் எஸ்யூவி கார் விளங்கும். இந்தியாவில் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.