இந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் மாருதி SHVS மைல்ட் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் மற்றும் எர்டிகா எஸ்ஹெச்விஎஸ் மாடல்கள் விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
மாருதி SHVS
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள மாருதி SHVS நுட்பமானது முதன்முறையாக சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நுட்பமானது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. மேலும் இந்திய அரசின் FAME திட்டத்தின் கீழ் சிறப்பு மானியமும் இந்த கார்கள் வழங்கப்படுகின்றது.
SHVS என்றால் என்ன என்பதனை நாம் முன்பே விளக்கமாக பார்த்திருந்தாலும் சுருக்கமாக இங்கே காணலாம்…
- Smart Hybrid Vehicle by Suzuki (SHVS)
- SHVS ஹைபிரிட் நுட்பத்தினை மாருதி இன்ட்கிரேட்டடு ஸ்டார்டர் ஜெனரேட்டர் ( IGS-Integrated Starter Generator )என அழைக்கின்றது.
- போக்குவரத்து நிறுத்தங்களில் வாகனத்தை இயக்காமல் ஐடிலில் நிறுத்தும்பொழுது தானாகவே எஞ்சின் அனைத்துவிடும். திரும்ப கிளட்ச் பெடல் மீது கால் வைத்த உடன் எஞ்சின் இயங்க தொடங்கி விடும்.
- ஓட்டுநர் இருக்கை பட்டை தளர்த்தப்பட்டாலோ அல்லது ஓட்டுநர் பக்க கதவு திறந்தாலோ தானாகவே SHVS நுட்பம் அனைந்துவிடும்.
- எஸ்விஹெச்எஸ் நுட்பத்தில் அடுத்து ஆற்றலை திரும்ப பயன்படுத்தி கொள்ள உதவும் அமைப்பான Deceleration Energy Regenerating உள்ளது. இதன் மூலம் ஆற்றலை சேமித்து சிறப்பான எரிபொருள் சிக்கனத்திற்க்கு வழி வகுக்கும்
- என்ஜின் பவர் அசிஸ்ட் அமைப்பின் மூலம் என்ஜின் ஆற்றலை ஒழுங்கப்படுத்த மோட்டாரும் இயங்குகின்றது.
மேலும் முழுமையாக வாசிக்க … சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் என்றால் என்ன படிக்க