மிக வேகமாக வளர்ந்து வரும் யுட்டிலிட்டி சந்தையில் இந்தியளவில் முதல் 10 இடங்களை பிடித்த எஸ்யூவி மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
யுட்டிலிட்டி ரக சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய 4 மாடல்களை முதல் 10 இடங்களை கொண்ட பட்டியலில் நிரப்பியுள்ளது. குறிப்பாக மஹிந்திராவின் பொலேரோ எஸ்யூவி மாடல் 6598 எண்ணிக்கையை பதிவு செய்து பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மற்ற மாடல்களான மஹிந்திரா ஸ்கார்ப்பியோ , டியூவி300 , எக்ஸ்யூவி500 போன்றவைகளும் உள்ளது.
2,00,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள விட்டாரா பிரெஸ்ஸா பட்டியலில் முதலிடத்தை பெற்று 8932 கார்களை விற்பனை செய்துள்ளது. அதனை தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா 7918 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
பிரிமியம் ரக எஸ்யூவி மாடலான டொயோட்டா ஃபார்ச்சூனர் 1954 அலகுகளை விற்பனை செய்து 9வது இடத்தினை பெற்றுள்ளது.
வ.எண் | மாடல் விபரம் | ஜனவரி 2017 |
1. | மாருதி விட்டாரா பிரெஸ்ஸா | 8,932 |
2. | ஹூண்டாய் க்ரெட்டா | 7.918 |
3. | மஹிந்திரா பொலிரோ | 6,598 |
4. | மஹிந்திரா ஸ்கார்ப்பியோ | 4,387 |
5. | ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் | 3,761 |
6. | மஹிந்திரா TUV300 | 2,408 |
7. | மஹிந்திரா XUV500 | 2,144 |
8. | மாருதி S கிராஸ் | 2,109 |
9. | டொயோட்டா ஃபார்ச்சூனர் | 1,954 |
10. | ரெனோ டஸ்ட்டர் | 1,279 |
விற்பனை தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க – ஆட்டோமொபைல் வணிகம்