கடந்த 1997 ஆம் ஆண்டு தொடங்கிய யூரோ என்சிஏபி 20 ஆண்களில் 1200க்கு மேற்பட்ட கார்களை சோதனை செய்து 630க்கு மேற்பட்ட கார்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 160 மில்லியன் யூரோ பணத்தை செலவிட்டுள்ளது.
யூரோ என்சிஏபி
1997 ஆம் ஆண்டு முதன்முறையாக சோதிக்கப்பட்ட ரோவர் நிறுவனத்தின் ரோவர் 100 மற்றும் 2017 ஆம் ஆண்டில் சோதிக்கப்பட்ட புதிய ஹோண்டா ஜாஸ் என இரண்டு காரினையும் ஒப்பீட்டு வீடியோ பகிர்வு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பான கார்கள் என்ற நோக்கத்தை மையமாக கொண்டு செயல்படுகின்ற ஐரோப்பா கிராஷ் டெஸ்ட் மையம் கார்களின் பாதுகாப்பு தன்மை குறித்தான விழிப்புணர்வினை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி வருகின்றது.
இதுகுறித்து கிராஷ் டெஸ்ட் மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் கடந்த 20 ஆண்டுகளில் எவ்வாறு விபத்தின் உயிரிழப்பு குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து சாலைகளில் 3977 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் 2015 ஆம் ஆண்டில் 1732 ஆக குறைந்துள்ளது. இங்கிலாந்து மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் 78,000 உயிர்களை காப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் 10ல் 9 கார்கள் யூரோ என்சிஏபி தரசான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது இல்லை. மேலும் நட்சத்திர மதிப்பீட்டை கொண்டே கார்களை வாடிக்கையாளர்களும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சமீபத்தில் பிரசத்தி பெற்ற ஃபோர்டு மஸ்டாங் இரண்டு நட்சத்திர மதிப்பீட்டை பெற்று மிக மோசமான கார் என்ற பெயருக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பெரும்பாலான கார்கள் யூரோ என்சிஏபி சோதனையில் பூஜ்யம் நட்சத்திர மதிப்பீட்டை பெற்றவையாகும். குறிப்பாக பிரசத்தி பெற்ற ஸ்விஃப்ட் ,நானோ , ஐ10 , கோ , ஸ்கார்ப்பியோ போன்றவை ஆகும்.
இந்தியாவில் அக்டோபர் 2017 முதல் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனை நடைமுறைக்கு வரவுள்ளது.
இது குறித்தான வீடியோ பகிர்வினை காண.. ஆட்டோமொபைல் தமிழன் யூடியூப் தளத்தை Subscribe பன்னுங்க…நண்பர்களே….
youtube-link – https://youtu.be/a-ITayezLfA
https://youtu.be/a-ITayezLfA