உலகளாவிய கூகுள் இணைய தேடலில் நாடுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் ஆட்டோ பிராண்டுகள் விபரங்கள் வெளியாகியுள்ளது. உலகின் தேடலில் டொயோட்டா முதலிடத்தை பிடித்துள்ளது.
டாப் ஆட்டோ பிராண்டுகள்
உலகின் முதன்மையான கார் தயாரிப்பாளராக இருந்த வந்த டொயோட்டா கடந்த 2016 ஆம் ஆண்டின் முடிவில் குறைந்த எண்ணிக்கை வித்தியாசத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முதன்மையான கார் தயாரிப்பாளர் என்கின்ற பட்டத்தை இழந்திருந்தாலும் கூகுள் தேடலில் டொயோட்டா 71 நாடுகளின் தேடல் பட்டியலில்முன்னிலை வகிக்கின்றது.
193 நாடுகளிலும் அதிகம் கூகுள் தேடு தளத்தில் தேடப்பட்ட பிராண்டுகளை குயிக்கோ வரிசைப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 74 நாடுகளின் தேடலிடல் முதலிடத்தை டொயோட்டா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் சொகுசு கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ 51 நாடுகளில் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஹோண்டா 17 நாடுகளில் முன்னிலையில் உள்ளது.
இந்தியர்களின் தேடலில் கார் தயாரிப்பில் முதன்மையான மாருதி சுசூகி இடம்பெறாமல் இரண்டாம் இடத்தில் உள்ள ஹூண்டாய் முதலிடத்தை பெற்று விளங்குகின்றது.
தகவல் உதவி – quickco