உலகின் மிக விலை குறைந்த காராக விளங்கும் ரத்தன் டாடா அவர்களின் கனவு காரான டாடா மோட்டார்சின் நானோ கார் தற்பொழுது பல்வேறு புதிய அம்சங்களுடன் மேம்பட்டு வருகின்றது. புதிய நானோ காரில் ஹைபிரிட் ,எலக்ட்ரிக் மற்றும் அழுத்தம் மிக்க காற்று மூலம் இயங்கும் மாடல்களை கொண்டு வர டாடா திட்டமிட்டுள்ளது.
நானோ ஹைபிரிட்
சமீபத்தில் டாடா தலைவர் பதவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்த்ரியே தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ந. சந்திரசேகரன் டாடா மோட்டார்ஸ் தலைவராகவும் செயல்பட உள்ளதால் மிஸ்த்ரி கை விட வேண்டும் என சொன்ன நானோ காரை சந்திரசேகரன் புதுப்பிக்க உள்ளார்.
இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் டாடாவின் நானோ காரினை முற்றிலும் மேம்படுத்தி புதிய வசதிகளுடன் நானோ எலக்ட்ரிக் , நானோ ஹைபிரிட் மற்றும் நானோ ஏர் பவர்டு போன்ற மூன்று விதமான வேரியன்டில் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தோற்ற அமைப்பில் நானோ காரில் புதிய ஹெட்லேம்ப் , டெயில் விளக்கு மற்றும் டியாகோ காரின் இன்டிரியர் அம்சங்களை பெற்ற மாடலாக புதிய நானோ களமிறங்க உள்ளது. வரவுள்ள புதிய மாடல்கள் நானோ காருக்கு புதிய அடிதளத்தை அமைக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
உதவி – hindustan times