2017 டோக்கியா ஆட்டோ சலூன் கண்காட்சி அரங்கில் மோட்டார்சைக்கிள் தோற்ற உந்துதலில் டிசைனிங் செய்யப்பட்ட சுசூகி இக்னிஸ் மோட்டோக்ராஸர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டில் கடந்த 13ந் தேதி விற்பனைக்கு வந்து மாருதி இக்னிஸ் ரூ.4.59 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சினை பெற்று விளங்குகின்றது.
டோக்கியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்னிஸ் மோட்டோக்ராஸர் மாடல் மிக நேர்த்தியான பாடி ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு , ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க – மாருதி சுசூகி இக்னிஸ் பற்றி அறிய
இந்திய இக்னிஸ் மாடலில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 75 ஹெச்பி பவருடன் , 190 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.
பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க – இக்னிஸ் காரின் விலை விபரங்கள் அறிய
இக்னிஸ் மோட்டோக்ராஸர் 18 படங்கள் இணைப்பு
[foogallery id=”15569″]
பட உதவி – carwatch