மிகுந்த எதிர்பார்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளில் ஒன்றான பெனெல்லி 302R பைக் அடுத்த சில வார்ங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெனெல்லி 302R பைக்
- 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பெனெல்லி 302ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- கடந்த வருடமே விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட மாடல் தாமதமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- ஏபிஎஸ் பிரேக் வசதியை நிரந்தரமாக பெற்றிருக்கும்.
கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக இந்தியாவில் ஃபுல் ஃபேரிங் பெனெல்லி டொர்னேடோ 302R காட்சிக்கு வந்தது. 2016 ஆம் ஆண்டிலே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு முதல் பிரிமியம் பைக்குகளில் ஏபிஎஸ் நிரந்தரமாக சேர்க்கப்படலாம் என்பதனால் அதற்கு ஏற்ப ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சத்தை நிரந்தரமாக இணைக்க திடமிட்டுள்ள டிஎஸ்கே-பெனெல்லி இந்த ஆண்டில் திட்டமிட்டிருந்த 4 புதிய பைக்குகளை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.
டொர்னேடோ 302 ஆர் என்ஜின்
பெனெல்லி டிஎன்டி 300 நேக்டு பைக்கினை அடிப்படையாக கொண்ட முழுதும் அலங்கரிகப்பட்ட மாடலான டொர்னேடோ 302ஆர் பைக்கில் 38 ஹார்ஸ்பவர் , 27 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் லிக்யூடு-கூல்டு 300சிசி பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் வழியாக சக்கரங்களுக்கு ஆற்றல் செல்கின்றது. மிக நேர்த்தியாக ஃபேரிங் செய்யப்பட்டுள்ள 302 ஆர் பைக்கின் முன்புற டயரில் இரண்டு டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் ஒரு டிஸ்க்பிரேக் ஆப்ஷனை பெற்றுள்ளது.
சொகுசான பயண அனுபவத்தினை வழங்கும் வகையில் முன்பக்கத்தில் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் மற்றும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இருக்கும்.
டொர்னேடோ 302 ஆர் பைக்கின் போட்டியாளர்கள் கவாஸாகி நின்ஜா 300 , கேடிஎம் ஆர்சி 390 , யமஹா ஆர்3 மற்றும் வரவுள்ள புதிய டிவிஎஸ் அகுலா 310 போன்ற மாடல்களுக்கு சவாலாக அமையும்.
பெனெல்லி 302R பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.3.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)