சொகுசு கார் தயாரிப்பாளாரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தங்களுடைய எதிர்கால கார்களில் பயன்படுத்த உள்ள அதிநவீன டிஜிட்டல் லைட் டெக்னாலாஜி என்ற பெயரில் முகப்பு விளக்கினை அறிமுகம் செய்துள்ளது.
ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் போல லேசர் நுட்பத்திலான ஹெட்லேம்ப் விளக்கினை பயன்படுத்தாமல் மிகவும் தனித்துவமான அதிநவீன செயல்திறன் கொண்ட இந்த விளக்கினை மைக்ரோமிரர்ஸ் என்ற பெயரில் முதன்முறையாக எஃப்105 கான்செப்ட் மாடலில் அறிமுகம் செய்தது.
டிஜிட்டல் லைட் சிறப்புகள்
ஒவ்வொரு ஹெட்லைட்டில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மிகச்சிறிய மிரர் பயன்படுத்தப்பட்டு அதனுடன் இணைந்த கேமரா மற்றும் ரேடார் சென்சார் ஆகியவை உதவியுடன் சூழ்நிலைக்கு ஏற்ப மிக சிறப்பான வெளிச்சத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள மென்பொருள் உதவியுடன் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசாமல் இருக்கும் வகையில் செயல்படும்.
இந்த ஹெட்லைட் நுட்பத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு அம்சம் 4 விளக்கு புள்ளிகளை பெற்றுள்ள இதில் ஒவ்வொரு விளக்கிலும் 1024 எல்இடி சிப்கள் இடம்பெற்றிருக்கும் என்பதனால் ஒரு மகிழுந்தின் இருபக்க முகப்புவிளக்கிலும் சேர்த்து மொத்தம் 8192 எல்இடி சிப்கள் பெற்றிருக்கும். சாலைகளில் இடம்பெற்றுள்ள எச்சரிக்கை சின்னங்கள் , பாதசாரிகள் என அனைத்தும் மிக சிறப்பான முறையில் தெளிவாக வாகன ஓட்டிக்கு தெரியும் வகையில் ஒளிரும் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் டிஜிட்டல் லைட் டெக்னாலாஜி அமைந்திருக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் டிஜிட்டல் லைட் நுட்பத்தினை விரைவில் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் கொண்டு வரவுள்ளது. டிஜிட்டல்லைட் டெக்னாலஜியில் இடம்பெற்றுள்ள மிக சிறப்பான நுட்பம் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் டிஜிட்டல் லைட் படங்கள்